/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஊழலற்ற ஆட்சி அமைய மோடியின் கரத்தை வலுப்படுத்துங்கள்: அண்ணாமலை
/
ஊழலற்ற ஆட்சி அமைய மோடியின் கரத்தை வலுப்படுத்துங்கள்: அண்ணாமலை
ஊழலற்ற ஆட்சி அமைய மோடியின் கரத்தை வலுப்படுத்துங்கள்: அண்ணாமலை
ஊழலற்ற ஆட்சி அமைய மோடியின் கரத்தை வலுப்படுத்துங்கள்: அண்ணாமலை
ADDED : ஜன 30, 2024 04:10 AM

சங்கராபுரம் : 'ஊழலற்ற ஆட்சி அமைய நீங்கள் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்' என சங்கராபுரத்தில் அண்ணாமலை பேசினார்.
பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை,'என் மண்; என் மக்கள்' யாத்திரை மேற்கொண்டு வருகிறார். நேற்று சங்கராபுரம் வருகை தந்த அவர், பூட்டை ரோடு பர்கத் திரையரங்கம் அருகிலிருந்து ஊர்வலமாக புறப்பட்டு கடைவீதி மும்முனை சந்திப்பில் நடந்த கூட்டத்தில் பேசியதாவது:
சங்கராபுரம் தொகுதி வளர்ச்சி அடையாமல் பின் தங்கிய நிலையில் உள்ளது. தமிழகத்தில் ஏழை, எளிய மக்களுக்கு தரமான கல்வி கிடையாது. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே தரமான கல்வி கிடைக்கும் நிலை உள்ளது.
கல்வராயன்மலை வெள்ளிமலையில் உள்ள மலைவாழ் மக்கள் மட்டும் படிக்கும் பள்ளியில் படித்த 15 பேர் இந்த ஆண்டு ஐ.ஐ.டி.,யில் சேர்ந்துள்ளனர்.
சங்கராபுரம் நகரில் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்லும் வழியில் 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. பெண் பிள்ளைகள் பள்ளிக்கு எப்படி பாதுகாப்பாக சென்று வரமுடியும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பா.ஜ., ஆட்சியிக்கு வந்த பின் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வீடுகள், ஒரு லட்சத்து 75 ஆயிரம் கழிவறைகள், ஒரு லட்சத்து 24 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2013ம் ஆண்டுக்கு முன் 5 மருத்துவக் கல்லுாரிகள் மட்டுமே இருந்தது.
மோடி வந்த பின் புதிதாக 15 மருத்துவக் கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளது. இந்தியா கூட்டணி புஸ்வானமாகி உள்ளது. மீண்டும் 3வது முறையாக ஊழலற்ற ஆட்சி அமைய நீங்கள் மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அண்ணாமலை பேசினார்.
நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் சம்பத்,செயலாளர் அஸ்வத்தாமன், வேலுார் கோட்ட பொறுப்பாளர் காத்யாயணி, மாவட்ட தலைவர் அருள், ஒன்றிய தலைவர் கிழக்கு வேல்முருகன், மேற்கு ராமச்சந்திரன், வடக்கு ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் பிரகாஷ், செல்வகணபதி, பிரபு, யோக செல்வன், சத்யா மோகன், ஒன்றிய பொதுச் செயலாளர்கள் ஏழுமலை, கோவிந்தன், முத்தையன், சுரேந்திரன், பெரியசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.