ADDED : ஜன 13, 2026 05:17 AM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்க அனைத்து பணியாளர்கள் சங்க கூட்டமைப்பினர் 7வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சியில் நடந்த போராட்டத்திற்கு வட்டார இயக்க மேலாளர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். மாநில இணைச்செயலாளர் தீபா, வட்டார மேலாளர்கள் ஹேமலதா, சுகந்தி முன்னிலை வகித்தனர்.
அடிப்படை ஊதிய உயர்வு வழங்க வேண்டும். 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். நகர்ப்புற பணியாளர்களுக்கு பயணப்படி வழங்க வேண்டும்.
பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி நேற்று 7ம் நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
