ADDED : ஆக 20, 2026 07:52 PM
அ நிறம் | அளவு
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே விஷ விதை தின்று கல்லுாரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கோவிலுார் அடுத்த வேங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கணபதி மகள் தனுஷா, 18; திருவெண்ணைநல்லுர் அரசு கல்லுாரியில் பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் வயிற்று வலி காரணமாக அரளி விதையை அரைத்து தின்றி மயங்கி விழுந்தார். உடன், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று இறந்தார்.
புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
