ADDED : அக் 25, 2024 07:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே காணாமல் போன கல்லுாரி மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த உலகங்காத்தான் பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் மகள் அபர்ணா, 19; இவர், சேலம் மாவட்டம், தேவியாக்குறிச்சியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்சி., 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை 3:00 மணியளவில் வீட்டிலிருந்து சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.