/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அருவியில் குதித்த மாணவர்; பாறையில் தலை சிக்கி இறப்பு
/
அருவியில் குதித்த மாணவர்; பாறையில் தலை சிக்கி இறப்பு
அருவியில் குதித்த மாணவர்; பாறையில் தலை சிக்கி இறப்பு
அருவியில் குதித்த மாணவர்; பாறையில் தலை சிக்கி இறப்பு
ADDED : ஜன 01, 2025 01:05 AM

கச்சிராயபாளையம் : கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன் மலையில் உள்ள கொட்டபுத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் அருணாசலம் மகன் கலையரசன், 17, இன்னாடு அரசு மலைவாழ் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவர். அரையாண்டு விடுமுறைக்கு வீட்டிற்கு சென்ற கலையரசன், கடந்த 27ல் தன் நண்பர்கள் மூவருடன் சிறுகலுார் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க சென்றார்.
அப்போது கலையரசன், பாறையில் இருந்து தலைகீழாக தண்ணீரில் குதித்தவர் மீண்டும் வெளியே வரவில்லை. இதனால், அச்சம் அடைந்த அவரது நண்பர்கள், யாரிடமும் கூறாமல் ஊருக்கு சென்று விட்டனர். மகன் இரு நாட்களாக வீட்டிற்கு வராததால், உடன் சென்ற நண்பர்களிடம் அவரது பெற்றோர் விசாரித்தனர்.
அவர்கள், சம்பவம் குறித்து தெரிவித்தனர். கரியாலுார் போலீசார் சிறுகலுார் பகுதி பொதுமக்கள் உதவியுடன் தேடும் பணியில் ஈடுபட்டனர்.
தடாகத்தின் பாறை இடுக்கில் சிக்கியிருந்த உடலை நேற்று முன்தினம் மாலை 6:00 மணிக்கு மீட்டனர்.

