நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே பள்ளி சிறுவன் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் மகன் கோகுல்நாத், 15; திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வீட்டில் தனியாக இருந்த கோகுல்நாத், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை பிரகாஷ், 38; கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

