நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த மூலக்காடு கிராமத்தை சேர்ந்த ஆண்டி சடையன் மகள் பூமிகா, 19; இவர், சங்கராபுரத்தில் உள்ள தனியார் நர்சிங் கல்லுாரியில் டிப்ளமோ நர்சிங் 2ம் ஆண்டு படித்து வந்தார்.
நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்றவர் மாலை வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.
பூமிகா மொபைல்போன் சுவிட்ச் ஆப் ஆகி உள்ளது. இது குறித்து இவரது தந்தை சடையன் போலீசில் அளித்தார்.
சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

