/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் தயார் நிலையில் மாணவியர் விடுதி
/
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் தயார் நிலையில் மாணவியர் விடுதி
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் தயார் நிலையில் மாணவியர் விடுதி
கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் தயார் நிலையில் மாணவியர் விடுதி
ADDED : மார் 15, 2025 08:21 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் மாணவியர் விடுதி கட்டுமான பணிகள் முடிந்து திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் பி.ஏ., - பி.காம்., - பி.எஸ்சி., - இளங்கலை மற்றும் எம்.ஏ., - எம்.காம்., - எம்.எஸ்சி., என முதுகலை பாடப் பிரிவுகளில் 1,500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், கச்சிராயபாளையம், கல்வராயன்மலை, எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் பயின்று வருகின்றனர்.
சோமண்டார்குடி கோமுகி ஆற்றின் கரையில் புதிய கட்டடத்தில் இக்கல்லுாரி செயல்படுகிறது. கல்லுாரியில் வெளியூர்களில் இருந்து வரும் மாணவ, மாணவிகளுக்காக தனித்தனி விடுதிகள் உள்ளன.
மாணவர்களுக்கான கல்லுாரி விடுதி கட்டடம் தண்டலை - பெருவங்கூர் சாலையில் உள்ளது. மாணவிகள் விடுதிக்கு சொந்த கட்டடம் இல்லாத நிலையில் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள பள்ளி மாணவிகள் விடுதியில், கல்லுாரி மாணவிகள் தங்கியுள்ளனர். மாணவிகளுக்கான விடுதி கட்டுவதற்காக கல்லுாரியின் பின்புறம் தாட்கோ திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 4 கோடி ரூபாய் மதிப்பில் கட்டுமானப் பணிகள் துவக்கப்பட்டது. 100 மாணவிகள் தங்கும் வகையில் தரைதளத்தில் 8 அறைகள், முதல் தளத்தில் 8 அறைகளுடன் இந்த விடுதி கட்டுமானப் பணிகள் முடிந்துள்ளது. விரைவில் திறப்பு விழாவிற்கு தயார் நிலையில் உள்ளது.