sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

/

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு கல்வி நிறுவன மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : செப் 01, 2025 11:46 PM

Google News

ADDED : செப் 01, 2025 11:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;

தமிழ்நாடு மற்றும் பிற மாநில ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., ஐ.ஐ.ஐ.டி., என்.ஐ.டி., மற்றும் மத்திய பல்கலைகழங்களில் பட்டம், பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர் வகுப்பு, மாணவ, மாணவிகள் இந்த கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

உதவித்தொகை பெற விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் நல இயக்ககம், சென்னை மற்றும் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அணுகலாம்.

மேலும் https://bcmbcmw.tn.gov.in/welfschemes.htm#scholar shipschemes என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மத்திய, மாநில அரசின் இதர கல்வி உதவித்தொகை திட்டங்களின்கீழ் பயன்பெறும் மாணவர்கள், இக்கல்வி உதவித்தொகை பெற தகுதியற்ற வராகிறார்.

இந்த கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தினை, பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தில் சமர்ப்பிக்கவேண்டும். கல்வி நிறுவனங்களின் சான்றொப்பத்துடன் தகுதியான விண்ணப்பத்தினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறைக்கு வழங்க வேண்டும். புதுப்பித்தல் விண்ணப்பங்கள் வரும் செப். 30ம் தேதிக்குள், புதிய விண்ணப்பங்கள் வரும் அக். 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு சென்னையில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கம், 044-2-9515942 என்ற தொலைபேசியிலும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்கம் அலுவகத்தை 9445477817 எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us