தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் கள்ளக்குறிச்சியில் ஆய்வுக்கூட்டம்
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் கள்ளக்குறிச்சியில் ஆய்வுக்கூட்டம்
ADDED : செப் 08, 2026 07:43 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். திட்டத்தில் பயன்பெறும் பயனாளிகள் பட்டியல், வட்டார வாரியான பயனாளிகள் எண்ணிக்கை மற்றும் மாவட்டத்தின் மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதன்படி கடந்த ஜூன் 22 முதல் ஆகஸ்ட் 31ம் தேதி வரை நடைபெற்ற பிரசவத்தின் அடிப்படையில் அரசு மருத்துவமனையில் 195 குழந்தைகள், அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடந்த பிரசவங்களில் 202 குழந்தைகள், மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 1,551 குழந்தைகள் என மொத்தம் 1,948 குழந்தைகள் பயனாளிகளாக கணக்கிடப்பட்டுள்ளனர்.
இம்மாவட்டத்தைச் சேர்ந்த 539 கர்ப்பிணிகளுக்கு பிற மாவட்டங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிரசவம் நடந்துள்ளது.
அனைத்து பயனாளிகளுக்கும் இத்திட்டத்தில் தங்க மோதிரம் வழங்குவதற்கான நடவடிக்கை குறித்து குறித்து கூட்டத்தில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், திட்டத்தை உரிய முறையில் செயல்படுத்தி, தகுதியான அனைத்து பயனாளிகளும் பயன்பெறும் வகையில் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு கலெக்டர் பத்மஜா அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் சப் கலெக்டர் கார்த்திக் ராஜா, டி.ஆர்.ஓ., ஜீவா உட்பட பலர் பங்கேற்றனர்.
