சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்
சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்
ADDED : மே 12, 2026 04:08 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு பணிகள் தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடந்தது.
கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஏற்கனவே நடந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பொருட்கள் குறித்தும், அதன் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
தொடர்ந்து வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, நில அளவைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ள நிகழ்வுகளை முன்கூட்டியே கண்டறிந்து தீர்வு காண தேவையான நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ள நிகழ்வுகள், அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், பிரச்னை தொடர்பான நேர்வுகளில் உடனுக்குடன் தாமதமின்றி நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.
கூட்டத்தில் எஸ்.பி., அரவிந்த், டி.ஆர்.ஓ., ஜீவா மற்றும் அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.
