தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்

கள்ளக்குறிச்சியில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்


UPDATED : நவ 25, 2026 08:08 PM

ADDED : நவ 25, 2026 08:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2026 08:08 PM ADDED : நவ 25, 2026 08:08 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பத்மஜா தலைமையில் நடந்தது.

கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து நடந்த மாதாந்திர ஆய்வுக்கூட்டத்தில் அங்கன்வாடி மைய குழந்தைகள் ஊட்டச்சத்து நிலை குறித்த தகவல், குழந்தைகளுக்கு சரிவிகித உணவு வழங்குதல், இணை உணவு வழங்குதல், வளர்ச்சி கண்காணிப்பு செயல்பாடு, ஊட்டச்சத்து பற்றாக்குறை மதிப்பீடு செய்தல் மற்றும் அங்கன்வாடி மையங்களின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.

மேலும் அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் ஊட்டச்சத்து உறுதி செய்ய வேண்டும். சின்னசேலம், கல்வராயன்மலையில் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தும் வகையில் சிறப்பு கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

குழந்தைகளுக்கு விளையாட்டு பொருட்களை வழங்கி, ஒட்டுமொத்த வளர்ச்சி ஊக்குவிக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் மாவட்ட திட்ட அலுவலர் அருணா உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us