/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
உளுந்து விலை 'திடீர்' சரிவு; விவசாயிகள் கலக்கம்
/
உளுந்து விலை 'திடீர்' சரிவு; விவசாயிகள் கலக்கம்
ADDED : பிப் 05, 2025 10:19 PM
திருக்கோவிலுார்; அரகண்டநல்லுார் மார்க்கெட் கமிட்டியில் உளுந்து விலை, ஒரே நாளில் மூட்டை ஒன்றுக்கு, ஆயிரம் ரூபாய் குறைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக உளுந்து அறுவடை தீவிரமடைந்துள்ளது. நாள்தோறும், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட மூட்டைகள், அரகண்டநல்லூர் மார்க்கெட் கமிட்டியில் ஏலத்திற்கு குவிந்து வருகின்றன.
நேற்று, 1,700 மூட்டை உளுந்து விற்பனைக்கு வந்தது. இதுவரை சராசரி விலையாக மூட்டை ஒன்றுக்கு ரூ. 7 ஆயிரத்து 900 வரை விற்பனையானது. இந்நிலையில், நேற்று ரூ. 6 ஆயிரத்து, 999க்கு ஏலம் போனது. ஒரே நாளில் மூட்டை ஒன்றுக்கு, ஆயிரம் ரூபாய் விலை குறைந்தது விவசாயிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியது.
நேற்று மொத்தம், 309.4 மெட்ரிக் டன் விளை பொருட்கள் ஏலத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, ரூ.1.31 கோடி வர்த்தகமானது. இந்த நிலையில், வரத்தை பொருத்து உளுந்து விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.