/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
/
கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 28, 2025 05:53 AM

மூங்கில்துறைப்பட்டு: அக் 28-: மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு, தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்த தொழிலாளர் அலுவலர் ஆனந்தராஜ் பணி மாறுதல் பெற்று தருமபுரி சர்க்கரை ஆலைக்கு சென்றார். இவர் மீது ஊழல் வழக்கு இருப்பதால் அங்கு பணியில் சேர்க்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால் மீண்டும் மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு வருவதாக தகவல் தெரிவித்துள்ளார். அலுவலர் ஆனந்தராஜ் மீண்டும் மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணியில் சேர்க்க கூடாது என கூறி தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கம் மற்றும் அனைத்து தொழிற்சங்கம் சார்பில் நேற்று ஆலை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.