/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கரும்பு அரவை பணி துவக்கம் 3.25 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு
/
கரும்பு அரவை பணி துவக்கம் 3.25 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு
கரும்பு அரவை பணி துவக்கம் 3.25 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு
கரும்பு அரவை பணி துவக்கம் 3.25 லட்சம் மெட்ரிக் டன் இலக்கு
ADDED : ஆக 04, 2025 11:27 PM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2025 - 26ம் ஆண்டு அரவை பருவத்தில் 3.25 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அறுவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2024 - 25ம் ஆண்டு சிறப்பு அரவை பருவம் மற்றும் 2025-26ம் ஆண்டு முதன்மை அரவை பருவ அரவை பணியை கலெக்டர் பிரசாந்த் நேற்று துவக்கி வைத்து கூறியதாவது;
நடப்பு அரவை பருவத்திற்கு 9,300 ஏக்கர் அளவில் விவசாயிகள் கரும்பு பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் 3.25 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 4250 கரும்பு அங்கத்தினர்கள் பயன்பெறுவர். கடந்த 2024-25ம் ஆண்டு முதன்மை அரவை பருவத்தில் 3.9 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது என கூறினார்.
துவக்க விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்து மீனாட்சி, தலைமை கரும்பு அலுவலர் ராஜேஷ் நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.