/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற ஆலோசனை
/
கள்ளக்குறிச்சியை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற ஆலோசனை
கள்ளக்குறிச்சியை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற ஆலோசனை
கள்ளக்குறிச்சியை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற ஆலோசனை
ADDED : டிச 29, 2024 06:32 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை விபத்துகளைக் குறைத்து விபத்தில்லா மாவட்டமாக்கிட ஆய்வு கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாதாந்திர சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத் தொடர்பான ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது. மாவட்டத்தில் விபத்து ஏற்படும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இதில் புக்குளம், அக்ரகாரம், ஜே.எஸ்.குளோபல் பள்ளி, ஈரியூர், பாண்டியங்குப்பம், சின்னசேலம், பாதுார் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு விபத்து பகுதிகளில் விபத்துகளைத் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், சாலை விதிகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்தும் கேட்டறிந்து ஆய்வு செய்யப்பட்டது.
விபத்து பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் இணைப்பு சாலை அமைத்தல் பணிகளில் தற்போதைய நிலைக் குறித்தும் கேட்டறிந்து இணைப்பு சாலை, பாலம், வேகத்தடை, பாதுகாப்பு தடுப்பு கட்டைகள், ஒளிரும் விளக்கு மற்றும் பட்டைகள் அமைத்தல் உள்ளிட்ட சாலை விபத்து தடுப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
வாகன ஓட்டிகள் சாலை பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதை அலுவலர்கள் உறுதி செய்வதுடன், சாலை விதிகளை மீறுபவர்கள் மீதும், போக்குவரத்திற்கு இடையூறாக பொருட்களை சாலையில் கொட்டி உலர்த்துபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் கள்ளக்குறிச்சி மாவட்டத்தினை விபத்தில்லா மாவட்டமாக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் எஸ்.பி. ரஜத் சதுர்வேதி, டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், திருக்கோவிலுார் சப்-கலெக்டர் ஆனந்த்குமார்சிங், வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயபாஸ்கரன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.