/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க கலெக்டர் அறிவுரை
/
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க கலெக்டர் அறிவுரை
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க கலெக்டர் அறிவுரை
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு; பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க கலெக்டர் அறிவுரை
ADDED : ஏப் 16, 2025 11:56 PM

கள்ளக்குறிச்சி: கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என, கலெக்டர் பிரசாந்த் அறிவுறுத்தியுள்ளார்.
அவரது, செய்திக்குறிப்பு;
கோடை வெயிலில் உடலின் நீர்ச்சத்து குறையாமல் இருக்க தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஓ.ஆர்.எஸ்., எலுமிச்சை ஜூஸ், இளநீர், வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி மற்றும் பழச்சாறுகள் பருகி நீரிழப்பைத் தவிர்க்க வேண்டும். பருவகால பழங்கள், காய்கறிகள் மற்றும் வீட்டில் சமைத்த உணவுகளை உண்ண வேண்டும்.
பொதுமக்கள் அத்தியாவசிய நேரங்களில் மட்டும் வெளியே செல்ல வேண்டும். நல்ல காற்றோட்டம் மற்றும் குளிர்ந்த இடங்களில் இருக்க வேணடும். மெல்லிய தளர்வான பருத்தி ஆடைகளையே அணிய வேணடும். மதிய நேரத்தில் வெளியே செல்லும் போது கண்ணாடி மற்றும் காலனி அணிந்து பாதுகாப்புடன் செல்ல வேண்டும். குழந்தைகளை வாகனங்களில் தனியே அமர்த்திவிட்டு வெளியே செல்லக் கூடாது. குழந்தைகளுக்கு இளநீர், பழரசங்களை திரவ வடிவில் அருந்தசெய்ய வேண்டும். வெப்பம் தொடர்பான நோய்களை எவ்வாறு கண்டறிவது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.வயதானர்கள் முடிந்தவரை வீட்டிக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாக தோன்றினால், ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும்.கால்நடைகளை நிழல் தரும் கூரை அடியில் கட்ட வேண்டும். போதிய அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும். தீவனங்களை வெட்ட வெளியில் போட கூடாது. அடைக்கப்பட்ட இடத்தில் கால்நடைகளை கட்ட கூடாது. கோடை கால வெப்பம் அதிகமாக இருப்பதால் மாடி வீடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் ஒயர்கள் உருகி சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு, அதில் ஏற்படும் தீப்பொறியால் கூரை வீடுகள் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது. எனவே, கோடை காலம் முடியும் வரை பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.