sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் துவக்கம்

/

கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் துவக்கம்

கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் துவக்கம்

கோடைக்கால விளையாட்டு பயிற்சி முகாம் துவக்கம்


ADDED : ஏப் 19, 2025 01:06 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி,; கள்ளக்குறிச்சியில் மாவட்ட அளவிலான கோடைக் கால விளையாட்டு பயிற்சி முகாம் வரும் 25 ம் தேதி துவங்க உள்ளதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்த செய்திகுறிப்பு:

விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், மாவட்ட அளவிலான கோடைக் கால பயிற்சி முகாம் நடக்கிறது. வரும் 25 ம் தேதி முதல் மே 15 ம் தேதி வரை 21 நாட்களுக்கு காலை 6:30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரையும் நடக்க உள்ளது.

இதில் தியாகதுருகம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தடகளம், கபடி, கைப்பந்து, டேக்வாண்டோ ஆகிய விளையாட்டுகளுக்கும், சின்னசேலம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கால்பந்து விளையாட்டிற்கும் பயிற்சி நடக்கிறது.

இதில் பள்ளி, கல்லுாரியில் பயிலும் மாணவ-மாணவியர் மற்றும் மாணவர்கள் அல்லாத, 18 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களும் கலந்து கொள்ளலாம். கலந்து கொள்ளும் அனைவருக்கும் பங்கு பெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும். வரும் 25 ம் தேதி காலை 6:00 மணி முதல், பயிற்சி நடக்கும் இடத்திற்கு நேரில் சென்று பெயர்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 7401703474 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us