/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பள்ளி மாணவர்களுக்கு கோடை பயிற்சி
/
பள்ளி மாணவர்களுக்கு கோடை பயிற்சி
ADDED : மே 12, 2025 02:20 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பள்ளியில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கான கோடை கால பயிற்சி பட்டறை நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் அனைத்து பள்ளிகளை சேர்ந்த தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிலும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு நாள் கோடைகால பயிற்சி பட்டறை நடந்தது.
இந்த பயிற்சியில் விழுப்புரம், கடலுார், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களைச் சேர்ந்த, 445 மாணவ மாணவியர் பங்கேற்றனர்.
இதில் ஏ.ஐ., ரோபாட்டிக்ஸ் குறித்த விழிப்புணர்வு, தமிழ்த்திறனறித் தேர்வில் வெற்றி பெற்று ஊக்கத் தொகை பெறுவதற்கான சிறப்பு வழிகாட்டுதல், நீட், ஐ.ஐ.டி., தேர்வுகளில் வெற்றி பெற மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
நிறைவு விழாவில் பள்ளியில் தாளாளர் மகேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், நிர்வாக இணை இயக்குனர் டாக்டர் அபிநயா ராஜேந்திரன், பள்ளி முதல்வர் வெங்கட்ரமணன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

