/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மருந்து கடைகளில் திடீர் ஆய்வு
/
மருந்து கடைகளில் திடீர் ஆய்வு
ADDED : ஜூலை 04, 2025 02:39 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சுற்று வட்டார பகுதியில் உள்ள மருந்தகங்களில் மருந்து ஆய்வாளர்கள் மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப் புறங்களில் உள்ள சில மருந்தகங்களில் பிறக்கும் குழந்தை ஆணா, பெண்ணா பரிசோதனை, ரகசியமாக கருகலைப்பு செய்யப்படுவதாக புகார் எழுந்து வருகிறது. இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர் புகாரின் அடிப்படையில் அவ்வப்போது கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் விழுப்புரம் மருந்து காட்டுபாட்டு அலுவலர் பிரதீப்ஜெய்ந்த் கள்ளக்குறிச்சி, செல்லம்பட்டு, க.அலம்பளம், சூளாங்குறிச்சி, எலியத்துார் உட்பட பல்வேறு பகுதிகளில் சந்தேகத்திற்கிடமான மருந்து கடைகள் மற்றும் மொத்த மருந்து விற்பனையகத்தில் மருந்து ஆய்வாளர்கள் குழுவினரை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி சரக மருந்து ஆய்வாளர்கள் கள்ளக்குறிச்சி கீதா, கடலுார் சிலம்புஜானகி, விழுப்புரம் ைஷலஜா, திண்டிவனம் விஜயபாஸ்கர், சிதம்பரம் சுரேஷ், மருந்து ஆய்வாளர் மசேதுங் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர்.
இதில் டாக்டர்கள் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்துகள் வழங்குவது, மருந்தாளுநர்கள் இல்லாமல் மருந்துகள் விற்பனை செய்யும் மெடிக்கல் கடைகள், கடையின் பில் புக் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, விதிமுறைகளை மீறும் மருந்தகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளனர்.