/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
முகையூர் வட்டாரத்தில் வேளாண் அதிகாரி ஆய்வு
/
முகையூர் வட்டாரத்தில் வேளாண் அதிகாரி ஆய்வு
ADDED : பிப் 17, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார், : முகையூர் வட்டாரத்தில் வேளாண் திட்ட பணிகளை துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.
முகையூர் வட்டாரத்திற்கு உட்பட்ட முகையூர், கண்டாச்சிபுரம், ஆயந்துார் உள்ளிட்ட கிராமங்களில் உளுந்து உள்ளிட்ட விதை பண்ணைகளை வேளாண் துணை இயக்குனர் பெரியசாமி ஆய்வு செய்தார்.
உளுந்து, நெல் உள்ளிட்ட விதை குவியல்களை சுத்தம் செய்து தரமானதாக வழங்க விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின்போது வேளாண் துணை அலுவலர் பாஸ்கர், உதவி விதை அலுவலர் அரிகிருஷ்ணன், கிடங்கு மேலாளர் உள்ளிட்ட வேளாண்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.