ADDED : அக் 16, 2024 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் ; திருக்கோவிலுார் அடுத்த ஆலுார் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர்.
திருக்கோவிலுார் அடுத்த ஆலுார் கிராமத்தில், பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான 11 ஏக்கர் நிலங்களை இந்து சமய அறநிலைத்துறை ஆலய நிலங்கள் தனி வட்டாட்சியர் அனந்தசயனன், முன்னிலையில் நில அளவையர்கள் அளவீடு செய்தனர்.
அப்பொழுது வருவாய் ஆய்வாளர் அன்பரசி, கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தன், அறங்காவலர்கள் வளர்மதி, அய்யனார் உடன் இருந்தனர்.