முடக்கப்பட்ட திட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும்; வேட்பாளர் ராகேஷ் உறுதி
முடக்கப்பட்ட திட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும்; வேட்பாளர் ராகேஷ் உறுதி
ADDED : ஏப் 07, 2026 11:12 PM

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் நகர பகுதி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அ.தி.மு.க., வேட்பாளர் ராகேஷ் ஓட்டு சேகரித்தார். அப்போது, மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். அப்போது வேட்பாளர் ராகேஷ் பேசியதாவது; கடந்த 5 ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில் எந்த ஒரு திட்ட பணிகளும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. மகளிர் பலருக்கு உரிமை தொகை கிடைக்கவில்லை. அரசு திட்டங்களில் பயனடைய லஞ்சம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. முன்னாள் முதல்வர் ஜெ., கொண்டு வந்த தாலிக்கு தங்கம், மானிய விலையில் ஸ்கூட்டர் உட்பட பல திட்டங்களை தி.மு.க., அரசு முடக்கியது. பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைந்ததும், முடக்கப்பட்ட திட்டங்கள் மீண்டும் அமல்படுத்தப்படும் என கூறினார். தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மோகன், அ,தி.மு.க., அரசின் சாதனை விளக்க துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
அப்போது முன்னாள் எம்.பி., காமராஜ், முன்னாள் ஒன்றிய சேர்மன் ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் அரசு இளந்தேவன், ராஜாராம், ராஜேந்திரன், அய்யம்பெருமாள், நகர செயலாளர்கள் நாராயணன், கருப்பன், அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் கோமுகி மணியன், ஒன்றிய செயலாளர் மாயா வேலாயுதம், ஒன்றிய இளைஞரணி குசேலன், வழக்கறிஞர் தாமரைச்செல்வன், ராஜா, கோவிந்தசாமி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சன்னியாசி, பா.ம.க., நகர கவுன்சிலர் பப்லு, நகர செயலாளர் ஜெகன், பா.ஜ., மாவட்ட துணை தலைவர் மணிமாறன், மாவட்ட பொது செயலாளர் மலையம்மாள், மாவட்ட துணை தலைவர் ஆரூர் ரவி, மாவட்ட செயலாளர் செல்வகணபதி, ஓ.பி.சி., அணி மாவட்ட பொது செயலாளர் பிரகாசம் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
