/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தந்தை இறப்பில் சந்தேகம்: மகன் போலீசில் புகார்
/
தந்தை இறப்பில் சந்தேகம்: மகன் போலீசில் புகார்
ADDED : நவ 10, 2024 06:40 AM
தியாகதுருகம் : தியாகதுருகத்தில் தந்தை இறப்பில் சந்தேகம் இருப்பதாக மகன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தை சேர்ந்தவர் தர்மு,61; ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் புதிதாக வீடு கட்டும் பணியை தொடங்கினார்.
அப்போது தர்முவின் மனைவி அமுதாவுக்கும், கொத்தனார் ஜெகன் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன், மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டு வந்தது.
கடந்த 7ம் தேதி வீடு கிரக பிரவேசம் நடந்தது. நேற்று முன்தினம் மதியம் தர்மு, டில்லியிலுள்ள மகன் பாபுவிடம் பேசியுள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை 6.45 மணியளவில் தந்தை தர்மு இறந்து விட்டதாக, அமுதா போன்மூலம் மகன் பாபுவிடம் தெரிவித்துள்ளார் தந்தை தர்முவின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக, மகன் பாபு அளித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.