/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வியை மேம்படுத்தும் சு.வாளவெட்டி சிஷ்யா கல்லுாரி
/
கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வியை மேம்படுத்தும் சு.வாளவெட்டி சிஷ்யா கல்லுாரி
கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வியை மேம்படுத்தும் சு.வாளவெட்டி சிஷ்யா கல்லுாரி
கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வியை மேம்படுத்தும் சு.வாளவெட்டி சிஷ்யா கல்லுாரி
ADDED : அக் 01, 2025 12:29 AM

கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவை நினைவாக்கும் வகையில் செயல்படும் சு.வாளவெட்டி சிஷ்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாாி.
திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணாச்சலேஸ்வரர் கல்வி அறக்கட்டளை 2003ம் ஆண்டு முதல் சிஷ்யா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இயங்கிக் கொண்டிருக்கிறது.
தொடர்ந்து, நகர்ப்புற மாணவர்களின் உயர் கல்வியை மேம்படுத்தும் நோக்கத்திலும், கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வியை வளர்க்கும் வகையில் திருக்கோவிலுார் - திருவண்ணாமலை சாலையில் சு.வாளவெட்டியில் 2017ம் ஆண்டு சிஷ்யா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது.
பி.ஏ., தமிழ், ஆங்கிலம், பி.காம்., - பி.பி.ஏ., - பி.எஸ்சி., கணினி அறிவியல், கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல் மற்றும் பி.சி.ஏ., ஆகிய 11 இளங்கலை பாடப்பிரிவுகளும், எம்.ஏ., தமிழ், எம்.எஸ்சி., கணினி அறிவியல் மற்றும் எம்.காம்., முதுகலை பாடப்பிரிவுகளும் இயங்குகிறது.
சுற்றுப்புற கிராம பகுதிகளுக்கு பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. குறைவான கட்டணம், தரமான கல்வி சேவை வழங்கப்படுவதால் கிராமப்புற மாணவர்கள் இங்கு, ஆர்வமுடன் கல்வியை தொடருகின்றனர்.
திருவள்ளுவர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் இயங்கும் இக்கல்லுாரியில் பல்கலைக்கழக அளவிலான தரவரிசை பட்டியலில் இடம்பெறும் வகையில் அதிக மதிப்பெண்கள் பெறுவதுடன், விளையாட்டுப் போட்டிகளிலும் சாதனை படைக்கின்றனர். போட்டித் தேர்வுகளில் பங்கேற்று மாணவர்கள் வேலை வாய்ப்பை பெரும் வளாக நேர்காணல், நவீன ஆய்வகம், நுாலகம், புதுமைப் பெண், தமிழ் புதல்வன் திட்டத்தில் அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் பெரும் திட்டத்திலும் இங்கு பயன்பெறலாம்.
அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களால் சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது. லாப நோக்கமற்ற கல்வி அறக்கட்டளையின் சிறந்த செயல்பாட்டுடன் கல்வி சேவையாற்றி வருகிறது என்றால் அது மிகை ஆகாது.