
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னசேலம் : சின்னசேலம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி 8ம் நாளையொட்டி, ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
நவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்து, கற்கள் கொண்ட அங்கியுடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவருக்கு மலையப்ப சுவாமிகள் அலங்காரம் செய்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது. கோவிலின் பாடல் குழுவினர் தாலாட்டு பாடல் பாடினர். ஆர்ய வைசிய நிர்வாகிகள் வழிபாடுகளை செய்தனர். பூஜைகளை கோவில் அர்ச்சகர் முரளி சர்மா செய்து வைத்தார்.