ADDED : ஆக 04, 2025 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரம் தாசில்தாராக வைரக்கண்ணன் நேற்று பொறுப்பேற்றார்.
சங்கராபுரம் தாசில்தாராக பணியாற்றிய விஜயன், கடந்த 31ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார்.
இதனையடுத்து கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாராக பணிபுரிந்து வந்த வைரக்கண்ணன், சங்கராபுரம் புதிய தாசில்தாராக நியமிக்கப்பட்டார். நேற்று காலை புதிய தாசில்தாராக வைரக்கண்ணன் பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ.,க்கள், கிராம உதவியாளர்கள், அலுவல பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.