/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அனுமதியின்றி பட்டாசு கடை தாசில்தார் எச்சரிக்கை
/
அனுமதியின்றி பட்டாசு கடை தாசில்தார் எச்சரிக்கை
ADDED : அக் 23, 2024 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் வட்டத்தில் உரிமம் இல்லாமல் பட்டாசு கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தாசில்தார் மாரியா பிள்ளை எச்சரித்துள்ளார்.
அவர், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
திருக்கோவிலுார் வட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விருப்பம் உள்ளவர்கள் இ சேவை மையங்களில் தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பித்து தற்காலிக பட்டாசுகள் விற்பனை உரிமம் பெற்று, பட்டாசு கடை நடத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது. உரிமம் இல்லாமல் பட்டாசு கடை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.