/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தகுதியில்லாத நபர்களின் விண்ணப்பத்தை பதிவேற்றினால் இ-சேவை உரிமம் ரத்து தாசில்தார் எச்சரிக்கை

ADDED : மார் 05, 2024 11:51 PM

ரிஷிவந்தியம் : 'தகுதியில்லாத நபர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தால் இ-சேவை மையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும்' என தாசில்தார் எச்சரித்துள்ளார்.
வாணாபுரத்தில் இ-சேவை மையத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக பா.ஜ., சார்பில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் குமரன் தலைமையில் சமாதான கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில், பா.ஜ., நிர்வாகிகள் ரவி, ஜோதிநாதன், பாலகிருஷ்ணன், சுந்தர், செல்வராஜ், மற்றும் இ-சேவை மைய உரிமையாளர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் மாலை செய்பவர், முடி திருத்துபவர், தச்சர் என 18 விதமான தொழில் செய்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் கடன் தொகையை மத்திய அரசு வழங்குகிறது.
இதற்காக சம்மந்தப்பட்ட தொழில் செய்பவர்கள் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இ-சேவை மைய உரிமையாளர்கள் தகுதியில்லாத நபர்களிடம் பணத்தைப் பெற்று, மனுவை பதிவேற்றம் செய்வதால் மத்திய பா.ஜ., அரசுக்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இ-சேவை மையத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ஜ.,வினர் தெரிவித்தனர்.
தகுதி வாய்ந்த நபர்களின் விண்ணப்பத்தை மட்டுமே பதிவேற்ற வேண்டும், அதை மீறி செயல்படும் இ-சேவை மையங்களின் உரிமம் ரத்து செய்வதுடன், கடைக்கு 'சீல்' வைக்கப்படும் என தாசில்தார் குமரன் எச்சரித்தார். இதனையடுத்து பா.ஜ., சார்பில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டது.