ADDED : ஆக 02, 2025 07:35 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய்த்துறையில் 2 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்தும், ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கியும் கலெக்டர் உத்தரவிட்டார்.
கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணிபுரிந்த வைரக்கண்ணன், சங்கராபுரம் தாசில்தாராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
அதேபோல், கல்வராயன்மலை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக பணிபுரிந்த சிலம்பரசன், கள்ளக்குறிச்சி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக மாற்றப்பட்டுள்ளார்.
கலெக்டர் அலுவலகத்தில் 'எல்' பிரிவு தலைமை உதவியாளராக பணிபுரிந்த மணி என்பவருக்கு தற்காலிக பதவி உயர்வு வழங்கி, கல்வராயன்மலை சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்டத்தில் 2 தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்தும், ஒருவருக்கு பதவி உயர்வு வழங்கி கலெக்டர் பிரசாந்த் உத்தரவிட்டுள்ளார்.