/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாலுகா வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம்
/
தாலுகா வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம்
ADDED : டிச 29, 2024 06:31 AM

ரிஷிவந்தியம்: வாணாபுரம் தாலுகா வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
வாணாபுரம் பகண்டைகூட்ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் தாலுகா வழக்கறிஞர்கள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், அதிகளவு கிராமப்புறங்களை உள்ளடக்கிய தாலுகாவாக வாணாபுரம் உள்ளது.
இப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்களது வழக்கு சார்ந்த பிரச்னைகள் மற்றும் விசாரணைக்கு ஆஜராக சங்கராபுரம், திருக்கோவிலுார் மற்றும் கள்ளக்குறிச்சிக்கு செல்கின்றனர். இதனால் வீண் அலைச்சல் ஏற்படுகிறது. கிராமப்புறம் சார்ந்த பகுதி என்பதால் போதிய பஸ் வசதியும் இல்லை. எனவே, வாணாபுரத்தில் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்க தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், வழக்கறிஞர்கள் தேவச்சந்திரன், ரஞ்சித், லஷ்மிகுமார், ஜெயதுரை, செந்தில் உட்பட வழக்கறிஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.