ADDED : மார் 16, 2026 03:33 AM
அ நிறம் | அளவு
சங்கராபுரம்: மஞ்சப்புத்துாரில் பழமை வாய்ந்த புளிய மரம் தீப்பிடித்து எரிந்து சேதமானது.
சங்கராபுரம் அடுத்த மஞ்சபுத்துார் கிராமத்தில் பழமை வாய்ந்த புளிய மரம் இருந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு, திடீரென தீப்பிடித்து எரிந்தது.
தகவலறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் பரமசிவம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தனர். தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.
