/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ் படைப்பாளர் சங்கம் முப்பெரும் விழா
/
தமிழ் படைப்பாளர் சங்கம் முப்பெரும் விழா
ADDED : ஜூலை 30, 2025 11:25 PM

சங்கராபுரம்: தமிழ் படைப்பாளர் சங்கம் சார்பில் அரங்க செம்பியன் அரங்கத்தில் அப்துல்கலாம் நினைவு தினம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்த தினம், இளம் விஞ்ஞானி ரவீன்ராஜிக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.
சங்க தலைவர் வேலு தலைமை தாங்கினார். இதயதுல்லா, செல்வராஜ், துணை தலைவர் அம்பேத்கர், கமலநாதன், சீனுவாசன், தாமோதிரன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சக்திவேல் வரவேற்றார்.
கல்லை தமிழ் சங்க செயலாளர் மதிவாணன், லட்சுமிபதி, சாதிக், சுப்பராயன், சவுந்தராஜன், பாரதிகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஓய்வு பெற்ற மின்வாரிய செயற்பொறியாளர் செல்வமணி, இளம் விஞ்ஞானி ரவீன்ராஜிக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ஜெய் பிரதர்ஸ் நற்பணி மன்ற தலைவர் விஜயகுமார், முத்தமிழ்முத்தன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆண்டப்பன் நன்றி கூறினார்.