/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சின்னசேலத்தில் தமிழ் கனவு நிகழ்ச்சி
/
சின்னசேலத்தில் தமிழ் கனவு நிகழ்ச்சி
ADDED : ஆக 07, 2025 02:39 AM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் இதயா கல்லுாரியில் நடந்த தமிழ் கனவு நிகழ்ச்சியை கலெக்டர் துவக்கி வைத்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரைத் திட்டத்தின் கீழ் சின்னசேலம் இதயா மகளிர் கல்லுாரியில் நடந்த தமிழ் கனவு நிகழ்ச்சியை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு வழிகாட்டுதல், தமிழின் பெருமிதம் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டது.
பின்னர் தமிழின் மரபு, பாரம்பரியம், இலக்கியம், தமிழின் தொன்மை, மகளிர் மேம்பாடு, தொல்லியல் ஆய்வுகள், கல்வி புரட்சி உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளின் கீழ் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ஜீவா, சி.இ.ஓ., கார்த்திகா, ஆர்.டி.ஓ., லுார்துசாமி மற்றும் அரசு அலுவலர்கள், மாணவிகள் பலர் பங்கேற்றனர்.