/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு கல்லுாரியில் தமிழ் மன்ற விழா
/
அரசு கல்லுாரியில் தமிழ் மன்ற விழா
ADDED : பிப் 11, 2024 09:52 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மாணவர் தமிழ் மன்ற விழா நடந்தது.
விழாவிற்கு கல்லுாரி முதல்வர் முனியன் தலைமை தாங்கி தமிழின் தொன்மையும், பழமையும் குறித்து பேசினார். மாணவர் சத்தியமூர்த்தி வரவேற்றார். விழாவில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு உதவி அலுவலர் சிவக்குமார் சிறப்புரையாற்றினார்.
தொடர்ந்து கவிதை, கட்டுரை, பேச்சு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்த்துறை தலைவர் மோட்ச ஆனந்தன், உதவி பேராசிரியர் விஜயகுமார், வேதியியல் துறைத் தலைவர் தர்மராஜா வாழ்த்திப் பேசினர்.
விழாவில் கல்லுாரி துறைத் தலைவர்கள் முருகானந்தம், வீரலட்சுமி, உமா, உதவி பேராசிரியர்கள் சித்ரா, சபிதா, நிதியாளர் பிரதாப், கண்காணிப்பாளர் மோகன், சமூக சேவகர் செந்தில்குமார், ஆசிரியர் பாண்டியன் உட்பட பலர் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை தமிழ்த்துறை பேராசிரியர்கள் நாகராஜன், ஆனந்தகுமார், ஆனந்தி, கற்பனைச்செல்வன், இன்பகனி, வீரப்பன், ராஜ்குமார் செய்திருந்தனர். நிகழ்ச்சியை தாமரைக்கொடி தொகுத்து வழங்கினார்.