/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ் இலக்கிய தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
/
தமிழ் இலக்கிய தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி
ADDED : மார் 02, 2024 05:53 AM
கள்ளக்குறிச்சி : தியாகதுருகம் பாரதியார் தமிழ் சங்கம் சார்பில் தமிழ் இலக்கிய தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிசசி ஏ.கே.டி. விடுதி கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சிக்கு, பாரதியார் தமிழ் சங்கத் தலைவர் துரைமுருகன் தலைமை தாங்கினார். கல்லை தமிழ்ச் சங்கத் தலைவர் புகழேந்தி, உதகை பைந்தமிழ் பாதுகாப்பு இயக்க தலைவர் அமுதன், சங்கராபுரம் தமிழ் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் இளையாப்பிள்ளை முன்னிலை வகித்தனர். ரிஷிவந்தியம் தெய்வத்தமிழ்ச் சங்கத் தவைர் ராஜகோபால் வரவேற்றார்.
ஜெயராமன், ஜெயம், ராமகிருஷ்ணன், தமிழரசி, விஜயன், மாரியம்மாள், குப்பன், குணசேகரன், ராதாகிருஷ்ணன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் தமிழ் இலக்கிய சொற்பொழிவாற்றினர்.

