/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ்நாடு நாள் நினைவு பேச்சு, கட்டுரைப் போட்டி
/
தமிழ்நாடு நாள் நினைவு பேச்சு, கட்டுரைப் போட்டி
ADDED : ஜூலை 12, 2025 03:41 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான பேச்சு மற்றும் கட்டுரைப் போட்டி நடந்தது.
முன்னாள் முதல்வர் அண்ணாதுரை தமிழ்நாடு என பெயர் சூட்டிய ஜூலை 18ம் தேதி, தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது. இதை நினைவு கூறும் வகையில், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், விழுப்புரம் தமிழ் வளர்ச்சி துறை உதவி இயக்குநர் சிவசங்கரி மேற்பார்வையில் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சு மற்றும் கட்டுரைப்போட்டி நேற்று நடந்தது.
8 தலைப்புகளில் நடந்த பேச்சு போட்டியில், 65 மாணவ, மாணவிகளும், ஆட்சி பணியில் கி.ராமலிங்கனார், அப்பாதுரையின் ஆட்சி பணி ஆகிய 2 தலைப்புகளில் நடந்த கட்டுரைப் போட்டியில், 65 பேர் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்ற 130 மாணவ, மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. 2 முதுகலை ஆசிரியர்கள் மற்றும் 4 பட்டதாரி ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டனர்.
போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.7 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகையும், சான்றிதழும் வழங்கப்பட உள்ளது. முதலிடத்தை பெறும் மாணவ, மாணவியர் அடுத்த கட்டமாக மாநில அளவில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க தகுதி பெறுவர்.