/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம்
/
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம்
ADDED : டிச 08, 2024 05:03 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட சிறப்பு பேரவை கூட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி. மீட்டிங் ஹாலில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் ஸ்டாலின்மணி, மாவட்ட பொருளாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு குடும்ப அட்டை அடிப்படையில் ரூ.5 ஆயிரம் நிவாரணம் உயர்த்தி வழங்கிட வேண்டும்.
பயிர்களுக்கு மற்றும் மரங்களுக்கு இழப்பீடாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ 50 ஆயிரமும், மானாவாரி பயிர்களுக்கு ரூ 25 ஆயிரமும் உயர்த்தி வழங்கிட வேண்டும்.
விவசாய பயிர்களுக்கு சாகுபடி செலவுகளுக்கு ஏற்ப ஏக்கருக்கு நெல், மரவள்ளி, மக்காச்சோளம் ஆகிய பயிர்களுக்கு ரூ35 ஆயிரமும், உளுந்துக்கு ரூ.10 ஆயிரம் வீதம் இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாநில பொருளாளர் பெருமாள், மாவட்ட துணை செயலாளர் ஏழுமலை, மாவட்ட துணை தலைவர்கள் அய்யனார், நாகராஜன், அருள்தாஸ், தெய்வீகன், ஆரோக்கியதாஸ், ராமசாமி, மணி மாறன், சேட்டு, செல்வராஜ், சுரேஷ்குமார் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.