/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மையம் ஆர்ப்பாட்டம்
/
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மையம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மையம் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மையம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 09, 2025 06:58 AM

கள்ளக்குறிச்சி : தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மையம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழக அரசு சமூக பாதுகாப்புடன் கூடிய காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட மையம் சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கலெக்டர் அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் வீரபுத்திரன், செந்தில், குமாரதேவன் முன்னிலை வகித்தனர். மாநில துணை பொது செயலாளர் மகாதேவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று கண்டன உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தொகுப்பூதியம், மதிப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம், ஒப்பந்தம், சமூக பாதுகாப்புடன் கூடிய காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.