/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ராமகிருஷ்ணா குருகுல மாணவிக்கு தமிழக கவர்னர் பரிசளிப்பு
/
ராமகிருஷ்ணா குருகுல மாணவிக்கு தமிழக கவர்னர் பரிசளிப்பு
ராமகிருஷ்ணா குருகுல மாணவிக்கு தமிழக கவர்னர் பரிசளிப்பு
ராமகிருஷ்ணா குருகுல மாணவிக்கு தமிழக கவர்னர் பரிசளிப்பு
ADDED : ஜன 14, 2025 07:20 AM

உளுந்தூர்பேட்டை; சென்னை ராஜ்பவனில் சிறப்புரையாற்றிய உளுந்தூர்பேட்டை ராமகிருஷ்ணா வித்யாலய குருகுல மாணவி பவஸ்ரீக்கு கவர்னர் ரவி பரிசு வழங்கி கவுரவித்தார்.
சென்னை ராஜ்பவனில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த நாள் விழா, தேசிய இளைஞர் தினமாக கொண்டாடப்பட்டது. விழாவில் கவர்னர் ரவி சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் உளுந்தூர்பேட்டை, ராமகிருஷ்ணா வித்யாலய குருகுல பத்தாம் வகுப்பு மாணவி பவஸ்ரீ சுவாமி விவேகானந்தரைப் பற்றி சிறப்புரையாற்றினார். எந்த காலத்திலும் இளைஞர்களின் தலைவனாக இருந்து வழிகாட்டுபவர் விவேகானந்தர்.
நான் வடிவமற்ற குரலாக இருந்து இளைஞர்களை தட்டி எழுப்பிக் கொண்டேயிருப்பேன் என்ற விவேகானந்தரின் வீர உணர்ச்சிகளை மாணவி பவஸ்ரீ வீரமுழக்கமாக மேடையில் பேசினார். அதனைத்தொடர்ந்து கவர்னர் ரவி, மாணவி பவஸ்ரீக்கு பொன்னாடை அணிவித்து, பரிசளித்து வாழ்த்தினார்.