/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திருக்கோவிலுார் கிளை திறப்பு விழா
/
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திருக்கோவிலுார் கிளை திறப்பு விழா
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திருக்கோவிலுார் கிளை திறப்பு விழா
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி திருக்கோவிலுார் கிளை திறப்பு விழா
ADDED : ஆக 29, 2025 11:55 PM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 588வது கிளை திறப்பு விழா நடந்தது.
திருக்கோவிலுார், கிழக்கு வீதியில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் 588 வது வங்கி கிளை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. மண்டல மேலாளர் குமரேசன் தலைமை தாங்கினார். கிளை மேலாளர் சிவசக்தி வேந்தன் வரவேற்றார். வங்கி கிளையை திருக்கோவிலுார் வணிகர் சங்க நிர்வாகி சிவாஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
ஏ.டி.எம்., மையத்தை நகராட்சி ஆணையர் திவ்யா, பாதுகாப்பு பெட்டக அறையை எம்.எஸ்., ஜூவல்லர்ஸ் உரிமையாளர் கோதம்சந்த், கணினி செயல்பாட்டினை பாபுலால் ஜூவல்லர்ஸ் உரிமையாளர் நித்தேஷ் திறந்து வைத்தனர்.
வங்கி ஊழியர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். வாடிக்கையாளர்கள் பலரும் கலந்து கொண்டனர். சேலம் மண்டல மேலாளர் ராஜமணிகண்டன் நன்றி கூறினார்.