ADDED : ஜூன் 30, 2025 03:25 AM

சின்னசேலம்: சின்னசேலத்தில் தமிழ் அமைப்புகளின் ஆண்டு விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சின்னசேலம், அரிசி ஆலை அரங்கத்தில் தமிழ் சங்கம், கம்பன் கழகன், கண்ணதாசன் கலை இலக்கிய பேரவை ஆகிய அமைப்புகளின் ஆண்டு விழா நடந்தது. தஞ்சை தமிழ் பல்கலை கழக பேராசிரியர் இளையாப்பிள்ளை தலைமை தாங்கினார்.
விழுப்புரம் பாவேந்தர் பேரவை தலைவர் ஆசைத்தம்பி, திருவண்ணாமலை மாவட்ட தமிழ்ச்சங்க தலைவர் இந்திரராஜன், உளுந்துார்பேட்டை முத்தமிழ் சங்க தலைவர் அருணா தொல்காப்பியன் முன்னிலை வகித்தனர். சங்க ஆலோசகர் பன்னீர்செல்வம் வரவேற்றார்.
சங்க தலைவர் கவிதைத்தம்பி வாழ்த்தி பேசினார். திருவள்ளுவர் படத்தை கருப்பன், கம்பர் படத்தை பாலமுருகன், கண்ணதாசன் படத்தை ரவீந்தர், அவ்வையார் படத்தை ராமசாமி ஆகியோர் திறந்து வைத்தனர்.
கவிதை தம்பியின், ஹைக்கூ கவிதை புத்தகத்தை ஆசிரியர் முருகன் வெளியிட்டார். தமிழ்ச்சங்க முன்னோடிகள் முதல் பிரதியை பெற்றுக்கொண்டனர்.
நிர்வாகிகள், உறுப்பினர்களுக்கு சங்க காப்பாளர் வெற்றிவேல், தனவேல் அடையாள அட்டைகளை வழங்கினர்.
ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் செல்வராஜ், நாகராஜன், கலியமூர்த்தி ஆகியோர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
சினிமா இயக்குனர் ராசி அழகப்பன் உள்ளிட்ட, 32 பேருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. ஆலோசகர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.