தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி சாகுபடி

 சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி சாகுபடி

 சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி சாகுபடி


ADDED : செப் 16, 2026 01:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2026 01:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பகுதியில் சொட்டுநீர் பாசனத்தில் மரவள்ளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி பகுதியில் பருவ மழையின் துவக்கத்தில் கரும்பு, நெல், மக்காசோளம் உள்ளிட்ட நீண்ட கால பயிர்களும், வறட்சி காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறையும்போது குறுகிய கால பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.

கோமுகி, மணிமுக்தா ஆகிய இரு அணைகள் மற்றும் ஏரிகளின் நீராதாரம் மூலம் கரும்பு மற்றும் நெற்பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

அதேபோல், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம் உள்ளிட்ட பகுதிகளில் இறவையிலும், கல்வராயன்மலையில் மானாவாரியிலும் 4,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது.

இப்பகுதியில் முள்ளுவாடி, தாய்லாந்து, பர்மா, குங்குமரோஸ் ரகங்களில் மரவள்ளி பயிரிடப்படுகிறது.

தற்போது, கடும் வெயில் இருப்பதால் நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. 10 மாத பயிரான மரவள்ளிக்கு தண்ணீர் தேவை அதிகம் என்பதாலும், வரும் காலங்களில் நிலத்தடி நீர் மட்டம் முற்றிலும் குறைவதற்கு வாய்ப்புள்ளதால் தண்ணீரை சேமிக்கும் வகையில் சொட்டுநீர் பாசனம் அமைத்து சாகுபடி செய்யப்படுகிறது.

இங்கு, உற்பத்தி செய்யப்படும் மரவள்ளி கிழங்குகள் சேலம், ஆத்துார், தலைவாசல் ஆகிய பகுதிகளில் உள்ள சேகோ பேக்டரிக்கு விற்பனைக்குக் கொண்டு செல்கின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த காரனுார், குதிரைச்சந்தல், க.மாமந்துார், சடையம்பட்டு, ஏர்வாய்பட்டினம், இந்திலி, கனியாமூர், தொட்டியம், தெங்கியாநத்தம் உட்பட பல்வேறு பகுதிகளில் சொட்டு நீர் பாசனம் அமைத்து மரவள்ளி சாகுபடி செய்வதில் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us