ADDED : ஜன 14, 2026 06:15 AM
கள்ளக்குறிச்சி: திருவள்ளூர் தினம், குடியரசு தினத்தையொட்டி மாவட்டத்தில் இரு நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று கலெக்டர் அறிவித்துள்ளார்.
கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 16ம் தேதி திருவள்ளூவர் தினம், 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள், டாஸ்மாக் கடைகளையொட்டியுள்ள மதுபான கூடங்கள், தனியார் மதுபான பார்கள் மூட வேண்டும். அன்றைய நாளில் மதுபாட்டில் விற்பனை செய்யப்படுவதாக புகார் வந்தால், கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல், தனியார் மதுபான கூடத்தில் மதுபாட்டில் விற்பனை செய்தால், அதன் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் ரத்து செய்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
