தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு 'லீவ்'

டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு 'லீவ்'

டாஸ்மாக் கடைகள் 3 நாட்களுக்கு 'லீவ்'


ADDED : ஜன 12, 2024 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2024 11:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி : திருவள்ளுவர் தினம், ராமலிங்கர் நினைவு நாள் மற்றும் குடியரசு தினத்தையொட்டி மாவட்டத்தில் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள், தனியார் பார்கள் இயங்காது என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மதுபான சில்லறை வணிக விதிகளின் கீழ் , திருவள்ளுவர் தினத்தையொட்டி, வரும் 16ம் தேதியும்; ராமலிங்கர் நினைவு நாள் வரும் 25ம் தேதியும்; 26ம் தேதி குடியரசு தினமும் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மற்றும் தனியார் பார்கள் 3 நாட்கள் இயங்காது.

மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் மதுக்கூடத்தில் மதுபானம் விற்பனை செய்வதாக தெரியவந்தால் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் ரத்து செய்தல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us