ADDED : ஆக 25, 2026 05:41 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிலாடி நபியை முன்னிட்டு இன்று 26ம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது.
கலெக்டர் பத்மஜா செய்திகுறிப்பு:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிலாடி நபியை முன்னிட்டு இன்று 26ம் தேதி டாஸ்மாக் கடைகள் இயங்காது. அதேபோல், மதுபான கடைகளையொட்டி உள்ள மதுக்கூடங்கள் மற்றும் தனியார் மதுபான பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
டாஸ்மாக் கடை மற்றும் மதுக்கூடத்தில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக தெரியவந்தால், சம்மந்தப்பட்ட கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் தனியார் பார்களில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக தகவல் தெரியவந்தால் மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல் மற்றும் உரிமங்களை ரத்து செய்தல் போன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
