ADDED : ஏப் 09, 2025 08:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : மாவட்டத்தில் நாளை 10ம் தேதி டாஸ்மாக் மற்றும் மதுபான கூடங்கள் இயங்காது என, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்த செய்திக்குறிப்பு :
மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, நாளை 10ம் தேதி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மூடப்பட வேண்டும்.
அங்கு மதுபானம் விற்பனை செய்வதாக தெரிய வந்தால், சம்மந்தப்பட்ட டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளின் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப் படும்.
மதுக்கூடத்தின் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும். உரிமங்களை ரத்து செய்வதுடன், உரிமைதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.