/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
குட்கா விற்ற டீ கடை உரிமையாளர் கைது
/
குட்கா விற்ற டீ கடை உரிமையாளர் கைது
ADDED : ஜூலை 20, 2025 12:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கோவிலுார்: மணலுார்பேட்டை டீ கடையில் ஹான்ஸ் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
மணலுார்பேட்டையில், திருவண்ணாமலை - தியாகதுருகம் சாலையில், டீக்கடை ஒன்றில் ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மணலுார்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் சலாம் உசேன் மற்றும் போலீசார் நேற்று கடையை சோதனையிட்டனர். அப்பொழுது ஹான்ஸ் உள்ளிட்ட ரூ. 3000 ரூபாய் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இது குறித்து கடை உரிமையாளரான அதே பகுதியைச் சேர்ந்த ஜான் பாஷா மகன் முகமதுஹாலிப், 32; மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.