/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வி . இ . டி ., கல்லுாரியில் ஆசிரியர் தின விழா
/
வி . இ . டி ., கல்லுாரியில் ஆசிரியர் தின விழா
ADDED : செப் 05, 2025 07:49 AM

திருக்கோவிலுார்; காணை வி.இ.டி., கல்வியியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரிய மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
காணை வி.இ.டி., கல்வியியல் கல்லுாரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. கல்லுாரி முதல்வர் சதீஷ்குமார் வரவேற்றார். கல்லுாரி நிர்வாக இயக்குனர் கார்த்தியராஜ் பங்கேற்று ஆசிரியர்களின் பங்களிப்பு குறித்து சிறப்புரையாற்றி, ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் கல்லுாரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர். பேராசிரியர் ஜெயநாராயணி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பேராசிரியர் ராமச்சந்திரன் நன்றி கூறினார்.