/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆசிரியர்களால் மாணவர்களுக்கு சிறப்பு
/
ஆசிரியர்களால் மாணவர்களுக்கு சிறப்பு
ADDED : ஆக 31, 2025 04:05 AM

உளுந்துார்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்தது பெருமையாக உள்ளது. பள்ளி ஆசிரியர்கள் அறிவழகன், பாலச்சந்தர் உள்ளிட்ட ஆசிரியர்களின் வழிகாட்டுதலால் படிப்பில் சிறந்து விளங்கினேன்.தற்போது நகராட்சி துணை தலைவராக உள்ளேன். இப்பள்ளியில் படித்த பலர் அரசு பதவிகளில் உயர்ந்த நிலையில் உள்ளனர்.
பள்ளியின் நினைவுகள் இன்றும் நினைவில் உள்ளது. பள்ளிப் பருவம் போல் வேறு எந்த பருவ காலத்திலும் கிடைக்காது. பள்ளியால் ஆசிரியர்களுக்கு சிறப்பு, ஆசிரியர்களால் மாணவர்களுக்கு சிறப்பு. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருப்பேன். பள்ளிக்கு தேவையான வசதிகளையும் செய்து தருவேன்.
வைத்தியநாதன், நகராட்சி துணை தலைவர், உளுந்துார்பேட்டை.